Thursday, March 24, 2011

நம்முடன் நாம் :-)

அன்பு வணக்கங்களுடன் மறுபடியும் நான் ...

சென்ற வாரத்தின் இறுதி நாட்கள் ...மறக்க முடியாதவை. என்னால் எனக்கு ஏற்ற மனநிலையோடு நானாக இருக்க முடிகின்ற ஒரு சூழ்நிலை.. அமைத்துக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி..

நான் புரிந்து கொண்ட, எனக்காக மட்டுமல்லாது நம்மில் பலருக்காகவும் நான் வருத்தப்பட்ட ஒரு உண்மை... நம்மில் பலரும் நம் ஒவ்வொருவருடைய சூழ்நிலைகளுக்காகவும் நம்முடைய சுயத்தை, நாம் என்ற அடையாளத்தை இழந்தும், பல இடங்களில் தெரிந்தே தொலைத்தும் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் நம்முடைய தேவைகள் என்ன ?
நம் உள்மனதிற்கு விடை தெரிந்தும் அதை மௌனிக்க பணித்திருக்கிறோம். அறிவும் மனதும் மாற்று பாதையில் செல்ல விரும்பும்போது, நமக்கான உள்ளுணர்வுகள் நம்மை நம் மனதை நோக்கிச் செல்ல அழைத்தாலும் கூட, விரும்பியோ விரும்பாமலோ நம் எண்ணங்களை புதைத்துக்கொண்டு அறிவின் பாதையில் செல்வதாய் நம்மை நாமே தேற்றிக்கொண்டு நம்முடைய மனதை நாமே கொன்றுபுதைக்கிறோம்.

நாம் நம் சமூகத்தை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தினால் இந்த நிலை ஏற்படுவதாய் நினைத்துக்கொள்கிறோம் . நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்க நம்மை தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் இல்லாத பொழுது , அந்த உரிமையை சமூகத்திடமும் ஏனைய பிறரிடமும் கொடுத்தது, கொடுத்ததாய் நினைத்துக்கொண்டிருப்பது நம்முடைய தவறு... இயலாமை...இதை முதலில் நாம் உணரவேண்டும் ....

மற்றோர் உயிரை உணர்வை காயப்படுத்துவது எந்த அளவிற்கு தவறோ, நம்முடைய உயிருள்ள உணர்வுகளை, மனதை, உரிமைகளை பிறருக்காகவோ பிறவற்றிற்காகவோ சிதைத்துக்கொள்வதும் அதே அளவிற்கு, மிகப்பெரிய குற்றம். நம்மை முழுதாக நாமாக உணரமுடியாத ஒரு பணியில், சூழ்நிலையில், வாழ்க்கையில் பயணிப்பது தற்கொலைக்கு சமமானதல்லவா ! இதை அறிந்தும் நம்மில் பலர் ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த இழிநிலையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம்.

இனியேனும், நமக்காக வாழத்துவங்குவோம்.. சமூகம், குடும்ப அமைப்பு, உறவுகள், நண்பர்கள், பணம், பதவி, புகழ், அன்பு, பாசம், காதல் இவர்களுள், இவற்றுள் யாராய் , எதுவாய் இருப்பினும், நம்மை நாமாக வாழச்செய்கின்ற சூழலுடன் நம் பயணத்தை இனிதே தொடர்வோம்...

இதில் நிச்சயம் மாற்றுக்கருத்துக்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழலாம்... ஏனெனில் வாழ்க்கை என்பதே நம் ஒவ்வொரு உயிரின் தனிப்பட்ட அனுபவம் , தனிப்பாதை பயணம் அல்லவா ???? :-)


விரைவில் அடுத்த பதிவுகளுடன் ,
மீண்டும் ,
நான் :-)

3 comments:

  1. it s nice.buy if you do so, you 'll be YOU only for yourself and not for others...so DO IN ROME AS ROMENS DO...

    ReplyDelete
  2. watever yu write in tis blog s true.. i think most gals in this society still livin wit tis kinda of mentality nd situation.. I hope everythin ll change soon nd make them to live nd take decisions independently.. vaazhkai vazhvadarkae :) cheers :)

    ReplyDelete
  3. ""மற்றோர் உயிரை உணர்வை காயப்படுத்துவது எந்த அளவிற்கு தவறோ, நம்முடைய உயிருள்ள உணர்வுகளை, மனதை, உரிமைகளை பிறருக்காகவோ பிறவற்றிற்காகவோ சிதைத்துக்கொள்வதும் அதே அளவிற்கு, மிகப்பெரிய குற்றம்"" ... nice lines ... forgiving our rights s really a foolish act !!

    ReplyDelete