வணக்கம் நண்பர்களே..
மாறி வரும் காலச்சூழல்கள், விஞ்ஞான வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களால், இன்று உங்கள் அனைவருடனும் நான் சேர்க்கப்பட்டிருக்கிறேன் ... பயணங்களில் பலரை சந்திக்கிறோம். ஆனால் சிலரின் சந்திப்புகள் மறக்க முடியாதவை.... இன்னும் சிலருடயதோ மறக்க கூடாதவை...
பரிமாற்றங்கள் , தடுமாற்றங்கள் , மனமாற்றங்கள் , ஏமாற்றங்கள் என்று எத்தனை எத்தனையோ மாற்றங்கள் ....ஏற்றுக்கொள்வது , விலகிநிற்பது, எதிர்த்து போரிடுவது என்று ஒவ்வொரு மனிதனின் எதிர்நோக்கும் தனித்தன்மையோடு அவரவரின் சூழலை ஒட்டியே அமைந்து விடுகிறது.
ஜெயிக்க , தோற்க , கற்க, சிரிக்க, அழ - என்று இவைகளுக்காகத்தான் இந்த உலகத்தில் தான் படைக்கப்பட்டிருப்பதாய் ஒவ்வொருவருக்குள்ளும் பல அனுமானங்கள்.
ஆனால் , உண்மையில் ஒவ்வொரு மனிதனும் இப்படி ஒவ்வொன்றை பற்றி கவலைப்பட்டே , தான் இந்த உலகத்தில் வாழ்வதற்காக படைக்கப்பட்டிருப்பதை மறந்து போகிறான். இறுதியில், வாழ்க்கை போராட்டத்தில் தொலைந்தும் போகிறான்.
எனவே, நான் பதிவு செய்ய விரும்புவது,நீ நீயாக இருப்பதே வாழ்க்கை . நாம் நாமாக வாழ்ந்திருப்போம் , இன்றைய நிஜங்களைத்தொலைக்காமல்.
என்றும் இணைந்திருப்போம் ......அடுத்த பதிவுகளோடு விரைவில் நான்.....
அழகான தமிழ் ஆழமான கருத்து....
ReplyDeleteவாழ்கையின் மற்றொரு பரிமாணம் என்று சொல்லலாம்
முயற்சிக்கு வாழ்த்துகள் !!
Bala
thank you balakrishnan :)
ReplyDeleteGayu....
ReplyDeletereally gud... impressed by ur words d....