2010- நேற்று பிறந்தது போல தோன்றினாலும், இன்றோடு நம்மை கடந்துபோகப்போகும் காலம் என்னும் விருட்சத்தில் - ஒரு இலை. இந்த ஆண்டு நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை அள்ளித் தெளித்திருக்கிறது .
பலருக்கு இது ஒரு சராசரி ஆண்டாக இருந்திருக்கலாம். சிலருக்கோ, அது மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கச்செய்திருக்கலாம் . ஆனால் , சிலருக்கோ, இது சித்ரவதைகளின் மொத்த குத்தகையாய் துன்புறுத்தி இருக்கலாம்.
எது எப்படி கடந்திருந்தாலும், கழிந்திருந்தாலும் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் ஒரு புதுவித எதிர்பார்ப்பையும் , நம்பிக்கையையும், உத்வேகத்தையும், பழயன கழிதலோடு புதிய பல புகுதல்களையும் முன்னிருத்திக்கொண்டு நமக்காக காத்திருக்கிறது 2011 .
எத்தனை எத்தனையோ ஆசைகளை மனதில் தக்கவைத்துக்கொண்டு ஒவ்வொருவரின் இதயமும் , எதையோ ஒன்றை எதிர்நோக்கிய படி நாளைய 2011.
வேறுபடும் ஒவ்வோர் ஆசைகளுக்கும் உருவமும் வேறு. 2011 நமக்காக தரவிருப்பது எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நாள் பட தேடிய வேலையோ, உயிருக்கு இணையாக விரும்பிய இதயமோ, வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களாகவோ , எதிர்பார்ப்புக்கு ஊதியமாய் உயர விரும்பும் நிலையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நம் ஒவ்வொருவரின் ஆசையும், எதிர்பார்ப்பும் , லட்சியமும் எதுவாக இருப்பினும் அவை அனைத்தும் இந்த இனிய புத்தம் புது ஆண்டில் நிறைவாக நிறைவேற இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . மறைந்த ஆண்டோடு துன்பங்கள் மறையட்டும், பிறக்கும் ஆண்டோடு இன்பங்கள் பிறக்கட்டும் :-)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteபுத்தாண்டில் மகிழ்ச்சி மலரட்டும் :-)